மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி ஏப்.2 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: இப்ராஹீம்ஷா 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு தற்போது 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், தமிழகத்தில் 3.5 சதவீதம் ஒதுக்கீடு என்பதை 5 சதவீதமாக உயர்த்தியும் வழங்க வேண்டும்.மேலும், மதுக்கடையால்

Updated On :31 மார்ச் 2013, 10:01 am

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வருகிற ஏப்.2ம் தேதி இந்திய முஸ்லிம் லீக்கின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் இப்ராஹூம்ஷா தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு தற்போது 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், தமிழகத்தில் 3.5 சதவீதம் ஒதுக்கீடு என்பதை 5 சதவீதமாக உயர்த்தியும் வழங்க வேண்டும்.மேலும், மதுக்கடையால் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பமும் சீரழிந்து வருகிறது. அதனால், இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

அதையடுத்து, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இந்தியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க இருப்பதாகவும் அதன் மாவட்ட தலைவர் இப்ராஹூம்ஷா தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.